காளான் பிரியாணி


வெஜ் பிரியாணில நிறைய வெரைட்டி செய்யலாம். ஆனா இந்த வெஜிடபுள் பிரியாணிங்கற பெயர்ல கேரட், பீன்ஸ் இன்னும் கையில கிடைக்கிற காய்கறி எல்லாத்தையும் போட்டு செய்யுற அந்த ஒரு பிரியாணியை மட்டும் செஞ்சிடாதீங்க. அதோட பெயர்ல மட்டும்தான் பிரியாணின்னு இருக்கும். அதுக்கும் பிரியாணிக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை.

அது போல செஞ்சி ஆபீஸ்க்கு கொடுத்துவிட்டிங்கன்னா லஞ்ச் பாக்ஸ் அப்படியே திரும்பி வரும். அதுல இருந்தே ஆத்துக்காரர் கடையில எங்கயோ குறுக்குசால் ஒட்டியிருக்காருன்னு தெரிஞ்சிக்கலாம்.

சரி இவ்வளவு பேசறியே, நீயே ஒரு வெஜ் பிரியாணி செய்முறை சொல்லேன்னு நீங்க நினைக்கறது என் காதுல விழுந்துட்டு. அதுக்குத்தான் இன்னைக்கு காளான் பிரியாணி எப்படி செய்யறதுன்னு சொல்ல போறேன்.

நான் சொல்றபடி செஞ்சி பாருங்க. சுவை சும்மா அசத்தலா, அசைவ பிரியாணிக்கே Tuff கொடுக்கும்.

சரி வாங்க காளான் பிரியாணி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

காளான் – 1/2 கிலோ

பாசுமதி அரிசி அல்லது பிரியாணி அரிசி – 2 கப்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கியது)

புதினா – 1/4 கப் (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

நெய் – 3 டேபிள் ஸ்பூன்

தேங்காய் பால் – 1/2 கப்

தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

மல்லி தூள் – 2 டீஸ்பூன்

சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

பிரியாணி இலை – 1

ஏலக்காய் – 3

இலவங்கம் – 2

கிராம்பு – 5

தண்ணீர் – 3 கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :-

1/2 கிலோ காளானை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பிரியாணி செய்வதற்கு தயராக வைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அரிசியை நீரில் ஊற வைக்க வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நெய் ஊற்றவும் நெய் நன்கு சூடேறியதும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கம் ஆகிய பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து, வதக்க வேண்டும்.

அதன் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி நன்கு வதக்கியதும், சுத்தம் செய்துள்ள காளானை சேர்த்து பிரட்டி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிரேவி போன்று வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

அதே சமயம், குக்கரை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் அரிசியைக் கழுவி போட்டு, அந்த கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் அருமையான சுவையில் காளான் பிரியாணி நமது வீட்டில் நாமே மிக எளிதாக செய்து விடலாம்.

நாளைக்கு எங்க வீட்ல காளான் பிரியாணி செய்ய போறேன். யார் வேணுன்னாலும் சாப்பிட வரலாம்.

நீங்க வெஜ் பிரியாணி எப்படி செய்வீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க. பதிவுக்கு மறக்காம லைக் போட்டுட்டு உங்க பிரியாணி பிரியர் நண்பர்களோட பதிவை பகிர்ந்துக்கோங்க.

Comments